தமிழகத்தில் உள்ள அனைத்து பாரம்பரிய மஸ்ஜிதுகளின் நிர்வாகத்தையும் மேற்பார்வை செய்யக்கூடிய தமிழ்நாடு வக்ஃபு வாரியம் சென்னையின் தலைமை வழக்கறிஞர் ஆக V. லக்‌ஷ்மி நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவரின் புகைப்படத்தை போட்டு #தவறான_தகவல்_பரப்பப்படுகிறது.


முதலில் ஒரு செய்தியை பரப்புவதற்கு முன்பு அந்த செய்தியை சொல்லக்கூடிய நபர்கள் யார்? அந்த செய்தியின் உண்மை தன்மை என்ன? என்பதை கூட சிந்திக்க நேரமில்லாதவர்களாக நம்மவர்கள் இருப்பது வருத்தமளிக்கிறது.
இதுபோன்ற செய்திகளை புகைப்படத்தோடு பரப்புவதன் மூலம் இதனை திட்டமிட்டு பரப்பியவர்களின் எண்ணம் வெற்றியடைகிறது ஆனால் நம் சமூகத்தின் மீது நல்ல மரியாதை கொண்டுள்ளவர்களை கூட முகம் சுழிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிடுகிறது.
சகோதரர் லட்சுமி நாராயணன் அவர்கள் மிகச்சிறந்த, மூத்த வழக்கறிஞர் அவர் ஏதோ இன்று வக்பு வாரியத்தில் நியமிக்கப்பட்டதை போல சிலர் தவறான தகவலை திட்டமிட்டு பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள் அவர் பல வருடங்களாக வக்ஃப் வாரியத்திற்காக பணியாற்றி வருகிறார்....பல வழக்குகளை வென்றும் இருக்கிறார்.
இது போன்ற குற்றச்சாட்டுகள்
திடீரென்று வருகின்ற போது சிலர் தங்களின் சுயலாபத்திற்காக செய்யும் செயலுக்கு, நாம் அதில் பலியாகிவிடக்கூடாது என்பதில் சமுதாயம் கவனமாக இருத்தல் வேண்டும்.
எனவே ஒரு சிறந்த வழக்கறிஞர் மீது கலங்கம் கற்பிப்பதையும், அவர்களை பற்றிய தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்.